தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்: தமிழக அரசின் புதிய திட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான அறிவிப்பினையும் அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின் படி, ட்ரெக்கிங், அதாவது மலையேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்காகவே தமிழகம் முழுவதும் 40 மலையேற்ற இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ட்ரெக்கிங் பயணம் மேற்கொள்ள இணையதளத்தையும் இன்று தொடங்கி வைத்தார் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
'தமிழ்நாடு மலையேற்ற திட்டம்' என அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் இணைய www.trektamilnadu.com என்ற இணையதளத்தையும் அமைச்சர் உதயநிதி இன்று அறிமுகம் செய்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NewsUpdate | தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்#SunNews | #TrekTamilnadu | #Trekking | @tnforestdept pic.twitter.com/7HIw7M4XXN
— Sun News (@sunnewstamil) October 24, 2024
செயல்முறை
எப்படி பதிவு செய்வது மற்றும் விவரங்கள்
மலையேற விரும்பும் சுற்றுலாவாசிகள், தமிழக அரசின் பிரத்யேக மலையேற்ற தளமான TrekTamilnadu.com-ல் பதிவு செய்து, உரிய அனுமதிகளை பெற்று, பழங்குடியின மற்றும் மலை கிராமங்களில் பயிற்சி பெற்ற இளைஞர்களின் உதவியுடன் மலையேறலாம்.
இதற்கான முதற்கட்டமாக 300 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மலையேற்ற இணையதளத்தில், உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்கி கணக்கு துவங்க வேண்டும்.
பின்னர், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மலைப்பகுதி சுற்றுலா தளங்களை எளிதான, சற்று கடினமான மற்றும் கடினமான மலையேற்ற பகுதிகளாக வகைப்படுத்தி, நீங்கள் உங்கள் மலையேற்ற அனுபவத்தைத் தேர்வு செய்யலாம்.