
வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசு நேற்று(மே.,31)ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் தகுதியுள்ள பெண்களுக்கு சுதந்திரத்தினத்தன்று தமிழக முதல்வரால் துணிவு மற்றும் வீரசாகச செயல்களுக்கான 'கல்பனா சாவ்லா விருது' வழங்குவது வழக்கம்.
தமிழ்நாட்டினை சேர்ந்த துணிச்சலான, வீரசாகசம் புரிந்த பெண்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2023ம்ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கான பரிந்துரைகள் கோரப்பட்டு வருகிறது.
இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படும் நபர் புரிந்த வீரசாகச செயல்களும், துணிவான செயல்களும் 800 வார்த்தைகளுக்குள் எடுத்துரைக்கப்படவேண்டும்.
இந்த விருதுக்கான பரிந்துரைகள் யாவும் https://awards.tn.gov.in என்னும் இணையத்தளம் மூலம் மட்டுமே பெறப்படுகிறது.
பரிந்துரைக்கப்படும் நபர்களுள் தகுதியானவரை தமிழக அரசு நியமிக்கும் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் |#KalapanaChawlaAward | #MKStalin | #Malaimurasu | pic.twitter.com/WuMd8PORdy
— Malaimurasu TV (@MalaimurasuTv) May 31, 2023