Page Loader
சென்னையில் பிரபல ஐந்து நட்சத்திர விடுதிகளின் உரிமங்களை அதிரடியாக ரத்து செய்த தமிழக அரசு
பார்களின் உரிமங்கள் அதிரடியாக ரத்து

சென்னையில் பிரபல ஐந்து நட்சத்திர விடுதிகளின் உரிமங்களை அதிரடியாக ரத்து செய்த தமிழக அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 04, 2024
01:06 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் இயங்கி வரும் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இயங்கி வரும் பார்களின் உரிமங்களை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இந்த உரிமங்களை ரத்து செய்யும் உத்தரவை, மதுவிலக்குத்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஹையத் ரீஜன்சி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் F.L.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன'. 'அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்துள்ளதாகவும், மேலும் மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல் தெரியவந்தன. இதனையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு செக்!