
தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவித்த சிறப்பு பேருந்து வசதி
செய்தி முன்னோட்டம்
இந்த வாரமும், அடுத்த வாரமும் தொடர் விடுமுறை காரணமாக தமிழக அரசு புதிய பஸ் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
முகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 06/09/2024 (வெள்ளிக் கிழமை முகூர்த்தம்) 07/09/2024 (சனிக்கிழமை விநாயக சதுர்த்தி), 08/09/2024 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 05/09/2024, 06/09/204 மற்றும் 07/09/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற ஊர்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN தொடர் விடுமுறையையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்#Bus #LongLeave #TNSTC #News18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/blUrvxzpeq
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 4, 2024