செப்டம்பர் 18, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான அரசாங்க விடுமுறையை அறிவித்த தமிழக அரசு
இந்து மாதத்தில் முழுமுதற் கடவுளாக கருதப்படுபவர் விநாயகர். அவரை போற்றும் விதமாக ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழா, ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும். அதனடிப்படையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக அரசின் விடுமுறை நாள்காட்டியில், செப்டம்பர் 17 ஆம் தேதி-யை விடுமுறை தினமாக அறிவித்திருந்தது அரசு. ஆனால், தற்போது, அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 18 தான் விநாயகர் சதுர்த்தி வருகிறது. அதனால், அரசு பொதுவிடுமுறை நாளை, தற்போது திருத்தி, மாற்றி அறிவித்துள்ளது, அரசு. அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. செப்டம்பர் 18 திங்கள்கிழமை ஆதலால், அந்த வார விடுமுறையை கொண்டாட இப்போதே மக்கள் திட்டம் தீட்ட துவங்கி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.