
தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கும் என அறிவித்துள்ளது.
அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனை மனதில் கொண்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
அதோடு, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் 'C' மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!#SunNews | @mkstalin | #TNGovernment | #Diwali pic.twitter.com/39EtCFOLtV
— Sun News (@sunnewstamil) October 10, 2024
தற்காலிக தொழிலாளர்கள்
தற்காலிக தொழிலாளர்களுக்கும் போனஸ் அறிவிப்பு
தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கருணைத்தொகை வழங்கப்படும்.
இதன் மூலம் 2.75 லட்சம் தொழிலாளர்களுக்கு 369 கோடி ரூபாய் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். நிரந்தர ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ. 8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 போனஸ் பெறுவர் என அறிவிப்பு தெரிவிக்கிறது.
மொத்தம் 2,075 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ. 369.65 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊக்கத்தை உயர்த்துவதோடு, எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வாய்ப்பு அளிக்கும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.