பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த தடம் பெட்டகம் ; அதன் சிறப்பம்சம் என்ன?
அரசுமுறைப்பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. அப்போது பிரதரிடத்தில் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார். பிரதமரை சந்தித்த முதல்வர். அவருக்கு தமிழர்களையும், தமிழர் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதமாக 'தடம்' பெட்டகத்தை பரிசாக வழங்கினார்.
தடம் பெட்டகத்தினுள் இருக்கும் பரிசு பொருட்கள் என்னென்ன?
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் தரமான வாழைநார்களைக் கொண்டு திருக்குறுங்குடி பகுதி பெண்கள் கலைத்திறனுடன் செய்யும் வாழை நார்க் கூடைகள். தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புலிகட்டிலிருந்து தயாரிக்கப்படும் மென்மையான பனை ஓலைகளைக் கொண்டு பொருட்கள் விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா குதிரை சிற்பங்கள் கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு நீலகிரியிலிருந்து தோடர் பழங்குடியினரின் எம்பிராய்டரி சால்வை பவானி ஜமுக்காளம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த தடம் என்பது தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான கைவினைப் பொருள்களைக் கொண்டு, 'ஸ்டார்ட்அப் தமிழ்நாடு' என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது ஆகும்.