Page Loader
நெல்லை மக்களே..இந்தியாவிலேயே சுத்தமான காற்று இருப்பது உங்கள் நகரில் தான்! 
தமிழ்நாட்டின் இரண்டு நகரங்கள் டாப் 10 இடங்களை பிடித்துள்ளது

நெல்லை மக்களே..இந்தியாவிலேயே சுத்தமான காற்று இருப்பது உங்கள் நகரில் தான்! 

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2025
05:06 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில ஆண்டுகளாக, டெல்லி மற்றும் மற்ற வடமாநிலங்களில் காற்றின் தரம் அதிகம் மாசடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பனிமூட்டத்தால் இருள் சூழ்ந்த இந்தியாவின் தலைநகர் டெல்லி, காற்று மாசுபாட்டின் காரணமாக கவலைக்குரிய நிலையை எட்டியுள்ளது. வடமாநிலங்களில் பல நகரங்கள் காற்று மாசுபாட்டில் அவதிப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள அதிகபட்ச மற்றும் தரமுள்ள காற்றுடன் உள்ள நகரங்களின் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டின் இரண்டு நகரங்கள் டாப் 10 இடங்களை பிடித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது தவிர தஞ்சாவூரும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

டாப் 10 நகரங்கள்

சுத்தமான காற்றுள்ள, காற்று மாசுபாடு அதிகம் உள்ள டாப் 10 நகரங்கள்

சுத்தமான காற்றுள்ள டாப் 10 நகரங்களில் திருநெல்வேலி முதலிடம் பிடித்தது. அதன் தொடர்ச்சியாக, நஹர்லாகன் (அருணாசல பிரதேசம்), மடிக்கேரி (கர்நாடகா), விஜயபுரா (கர்நாடகா), தஞ்சை (தமிழ்நாடு), கோப்பல் (கர்நாடகா), வாரணாசி (உத்தரபிரதேசம்), ஹூப்ளி (கர்நாடகா), கண்ணூர் (கேரளா), சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக காசியாபாத் (உத்தரபிரதேசம்), பைரனிஹாட் (மேகாலயா), சண்டிகர் (பஞ்சாப்), ஹபூர் (உத்தரபிரதேசம்), தன்பாத் (ஜார்க்கண்ட்), பாடி (ஹிமாச்சல பிரதேசம்), கிரேட்டர் நொய்டா (உ.பி.), குஞ்சேமுரா (மஹாராஷ்டிரா), நொய்டா (உ.பி.) ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.