Page Loader
வரதட்சணை கொடுமையில் சிக்கிய திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா உரிமையாளர் மகள்
திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல ஸ்வீட் கடை இருட்டுக்கடை ஹல்வா

வரதட்சணை கொடுமையில் சிக்கிய திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா உரிமையாளர் மகள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 16, 2025
02:01 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகளுக்கு திருமணத்துக்குப் பிறகு வரதட்சணை கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல ஸ்வீட் கடை இருட்டுக்கடை ஹல்வா. பல தலைமுறைகளாக இந்த வணிகத்தில் இருக்கும் இந்த குடும்பத்தின் பெண் வாரிசான கனிஷ்காவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் திருமணத்துக்குப் பின் கணவரிடம் இருந்து எதிர்பாராத வகையில் மன உளைச்சல் மற்றும் வற்புறுத்தல்கள் வந்ததாக தற்போது கனிஷ்கா தெரிவித்துள்ளார்.

புகார்

வரதட்சணை கொடுமை மற்றும் திருமணம் தாண்டிய உறவு என புகார்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிஷ்கா, "என் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. அந்த பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்தார். இதனால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டன. மேலும், 'திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையை எனது பேருக்கு மாற்றிக் கொடுத்தால்தான் வாழ்க்கையை தொடர முடியும்' என வற்புறுத்தினார்," என்றார். வரதட்சணை சம்பந்தமான ஒடுக்குமுறையின் காரணமாக கடந்த மார்ச் 15ஆம் தேதி கோவையிலிருந்து திரும்பிய கனிஷ்காவிற்கு, தொடர்ந்து WhatsApp மற்றும் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதுகுறித்து, இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மற்றும் அவரது மகள் கனிஷ்கா, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம், திருநெல்வேலி மற்றும் சமூக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post