Page Loader
சிறு குறு நிறுவனங்களின் ஒரு கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு 
சிறு குறு நிறுவனங்களின் ஒரு கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு

சிறு குறு நிறுவனங்களின் ஒரு கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு 

எழுதியவர் Nivetha P
Sep 30, 2023
05:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த மின்கட்டண உயர்வால் தங்கள் தொழில் முழுமையாக முடங்கி, தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் அபாயமுள்ளதாக கூறி சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது இவர்களின் ஒரு கோரிக்கையினை தமிழக அரசு ஏற்றுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாழ்வழுத்த நிலை மின்இணைப்பு கட்டணத்தினை 3Bல் இருந்து 3A(1)டாரிஃப்க்கு மாற்ற 12 KW-கீழுள்ள நிறுவனங்களும் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தாழ்வழுத்த நிலை கட்டணமானது பழைய கட்டண முறையிலேயே அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழக அரசு உத்தரவு