இந்தியாவின் வெப்பநிலை விரைவில் உயரும்: வானிலை ஆய்வு மையம்
அடுத்த ஐந்து நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது. அடுத்த 4-5 நாட்களுக்கு வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, கடலோர ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்." என்று வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "13 முதல் 17ம் தேதி வரை மேற்கு வங்கத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், ஏப்ரல் 13-15 வரை வட கடலோர ஆந்திரா மற்றும் ஒடிசாவிலும், ஏப்ரல் 15-17 வரை பீகாரிலும் வெப்ப அலை மிக அதிகமாக இருக்கும்." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இயல்பை விட அதிகமான மழை மார்ச் மாதத்தில் பதிவானது
அடுத்த ஐந்து நாட்களுக்கு கோவா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 1901ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த வருட பிப்ரவரி மாதத்தில் தான் மிக அதிகமான வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. இருப்பினும், ஏழு மேற்கத்திய இடையூறுகள் காரணமாக இயல்பை விட அதிகமான மழை மார்ச் மாதத்தில் பதிவானது. இதனால், வெப்பநிலை கட்டுக்குள் இருந்தது. வெப்ப அலைகள் பற்றி கணிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி தயார்நிலை குறித்த வழிகாட்டுதல்களை டெல்லி அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலில், மாணாவர்களுக்கு மதிய நேரங்களில் வெளியே கூட்டம் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.