NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை இயக்குனர் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை இயக்குனர் தகவல்
    தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்

    தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை இயக்குனர் தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 13, 2025
    09:44 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    "பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனைச் சுற்றிய மாலத்தீவு முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி செயல்பட்டு உள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மார்ச் 17ஆம் தேதி வரை இதே நிலை தொடரும்" என்றும் அவர் கூறினார்.

    மழை

    தமிழகத்தில் மழை நிலவரம்

    அவர் மேலும் கூறுகையில், "நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதன் பின்பு, கள்ளக்குறிச்சி 15 செ.மீ., கோமுகி அணை 12 செ.மீ., ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி கலயநல்லூர் தலா 11 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம், சூலாங்குறிச்சி 10 செ.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர், திருவாரூர், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது".

    "சென்னையில், வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காலையில் லேசான பனி மூட்டமும் காணப்படும்." எனக்கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    வெப்ப அலைகள்
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி
    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 15) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் புது உத்தரவு ஜெயலலிதா
    புதிய கல்விக் கொள்கையை ஏற்காதவரை தமிழகத்திற்கு நிதியில்லை: மத்திய கல்வி அமைச்சர் கைவிரிப்பு கல்வி
    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளராக நியமனம் திமுக

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாடு இன்னும் பாஜகவுக்கு எட்டா கனியா? MOTN கருத்துக் கணிப்பு கூறுவது என்ன? பாஜக
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: பொன்முடிக்கு கூடுதலாக காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் ஒதுக்கப்பட்டது பொன்முடி

    வெப்ப அலைகள்

    யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி!  கோடை காலம்
    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    வாட்டி வதைக்கும் வெயில்; அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு ஈரோடு
    தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்

    வானிலை அறிக்கை

    வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் தமிழகம்
    மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மையம்
    சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025