தெலுங்கானா முன்னாள் முதல்வர் KCR மருத்துவமனையில் அனுமதி
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், இன்று அதிகாலை 2 மணியளவில் ஹைதராபாத்தில் தனது இல்லத்தில், கால் தவறி கீழே விழுந்ததால், அருகே இருந்த யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்திரசேகர் ராவ் கீழே விழுந்ததில், அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அவருக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கே சந்திரசேகர் ராவ், 2014 முதல் 2023 வரை தெலுங்கானா முதல்வராக பதவி வகித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கே.சி.ஆர் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியை (பிஆர்எஸ்) காங்கிரஸ் தோற்கடித்த பிறகு, KCR, கடந்த மூன்று நாட்களாக தனது வீட்டில் மக்களை சந்தித்து வந்தார்.