LOADING...
மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு
பச்சை முட்டையுடன் தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை!

மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2025
08:16 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் ஷவர்மா உள்ளிட்ட சில உணவுகளில் பயன்படுத்தப்படும், பச்சை முட்டையுடன் தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு, மையோனைஸ் தயாரிப்பு மற்றும் சேமிப்பில் சுகாதாரக் கோளாறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மையோனைஸ் என்பது முட்டையின் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் மசாலாக்கள் கலந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருளாகும். இதில் பச்சை முட்டை பயன்படுத்தப்படுவதால், கிருமி தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

எச்சரிக்கை

தடையை மீறி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

மையோனைஸ் தயாரிப்பு முறைகள் முறையாக இல்லை, சேமிப்பு வசதிகளும் போதிய அளவில் இல்லை என்பதும், நுண்ணுயிரிகளால் ஏற்படும் மாசுபாடும் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி மையோனைஸை பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. அதேபோல், தெலுங்கானா மாநிலத்திலும் ஏற்கனவே இதேபோன்ற தடை அமலில் உள்ள நிலையில், தற்போது தமிழகமும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post