ஊராட்சிகளுக்கு வரி செலுத்த புதிய இணையதளம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் கிராமங்களில் பொதுமக்கள் தாங்களாகவே இணைய வழியில் வரிகளை செலுத்திக்கொள்ள வசதியாக புதிய இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் இந்த இணையதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த புதிய இணையதளத்தின் வாயிலாக ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து அவர்களுக்கான வரிகளை நெட் பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மற்றும் யுபிஐ மூலம் செலுத்த முடியும். மேலும் பொதுமக்கள் ஊராட்சி செயலரிடம் உள்ள பிஓஎஸ்(POS) எந்திரம் மூலமும் தங்கள் வரிகளை செலுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் ஊராட்சியின் பணிச்சுமை குறையும் எனவும், ஆண்டு கணக்கு எளிதாக முடிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.