
பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது: பிப்.,19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்
செய்தி முன்னோட்டம்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்குகிறது.
இது குறித்த அறிவிப்பை, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கும் கூட்டத்தொடரில், வரும் 19ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
நிதி மசோதாவுடன் இன்றைய கூட்டத்தொடர் நிறைவுற்றது.
இந்த இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பாக, 'விக்சித் பாரத்' திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலத்தின் உட்கட்டமைப்பு, திறனை வளர்க்க 50 -ஆண்டுகள் வட்டியில்லா கடனாக ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
இது சார்ந்த அறிவிப்பு தமிழக பட்ஜெட்டில் இடம் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ட்விட்டர் அஞ்சல்
தமிழ்நாடு கூட்டத்தொடர்
#BREAKING | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்.12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!#SunNews | #TNAssembly | #TNBudget pic.twitter.com/t6D3i1snwL
— Sun News (@sunnewstamil) February 1, 2024