
இரங்கல் கூட்டத்துடன் துவங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
முன்னதாக இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
இந்தாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், வேளாண் பட்ஜெட் உடன் பிப்ரவரி 22ஆம் தேதியுடன் இடையில் நிறுத்தப்பட்ட கூட்டத்தொடர், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் நிறைவடைந்ததும், இன்று கூடியது சட்டப்பேரவை கூட்டத்தொடர்.
கூட்டத்தொடரின் தொடக்கத்தில் மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
#BREAKING | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கியது
— Thanthi TV (@ThanthiTV) June 20, 2024
மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்#TNAssembly #TNGovt #ThanthiTV pic.twitter.com/CEgEdxChfE