கம்பம் திராட்சைக்கு கிடைத்த புவிசார் குறியீடு - நன்மைகள் என்ன?
தமிழ்நாட்டில் கம்பம் திராட்சைக்கு புவிசார் குறியீடு GI Tag வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கம்பம் பள்ளத்தாக்கு தென்னிந்தியாவின் திராட்சை நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு பன்னீர் திராட்சை சிறப்பு வாய்ந்ததாகும். திராட்சை மட்டுமின்றி வாழை, நெல், தென்னை ஆகியவைகள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. எனவே கம்பம் திராட்சை ஆன மஸ்கட் ஹாம்பர்க் என அழைக்கப்படும் இவை தமிழ்நாட்டில் மட்டுமே 85% வளர்கிறது. இந்த கருப்பு திராட்சை பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால், இதன் சாகுபடி கேரளாவிற்கு தனி விற்பனைக்கு செல்கிறது.
தமிழகத்தில் கம்பம் திராட்சைக்கு GI Tag லேபிள் - விவாசயிகள் மகிழ்ச்சி
மேலும், கருப்பு திராட்சையானது, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான 10 கிராமங்களில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்படுகிறது. இந்த கருப்பு திராட்சைகளில் அதிக வைட்டமின்கள், டார்டாரிக் அமிலம் அதிகம் உள்ளன. எனவே ஆண்டுக்கு 3 முறை அறுவடை செய்யப்படும் இந்த திராட்சைக்கு மத்திய அரசுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது வழங்கியுள்ளது. மேலும், கருப்பு திராட்சைக்கு புவிசார் குறியீடு GI Tag-லேபிள் கிடைத்தது குறித்து தமிழ்நாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.