தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகத்திற்கான வானிலை எச்சரிக்கைகள் பின்வருமாறு: டிசம்பர் 27 தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 28 தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் 29 மற்றும் டிசம்பர் 30 தென் தமிழகத்தில் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை.