LOADING...
இனி தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது; இந்த கல்வியாண்டு முதலே அமல்படுத்தப்படுகிறது
இனி தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது

இனி தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது; இந்த கல்வியாண்டு முதலே அமல்படுத்தப்படுகிறது

எழுதியவர் Sekar Chinnappan
Aug 08, 2025
12:34 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையின்படி, இனி மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது. இது நடப்பு ஆண்டு முதலே அமல்படுத்தப்பட்ட உள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த நிகழ்வின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்திற்கான புதிய கல்விக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். புதிய கொள்கையின்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே இனி பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்படுத்தினார். கூடுதலாக, 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கும் கொள்கையை அரசு தொடரும் என உறுதியளித்துள்ளார்.

மொழிக் கொள்கை

இருமொழிக் கொள்கையே நீடிக்கும்

மத்திய அரசால் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் முன்மொழியப்பட்ட மும்மொழி கல்வியை நிராகரித்து, தற்போதுள்ள இருமொழிக் கொள்கையே நீடிக்கும். 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை பரிந்துரைக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கும் முரணான முடிவை தமிழக அரசின் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. ஆரம்பம் முதலே தேசிய புதிய கல்விக் கொள்கை எதிர்த்து வந்த திமுக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2022 இல் மாநிலத்திற்கென தனி கல்விக்கொள்கை உருவாக்க அமைத்தது. இந்தக் குழு கடந்த ஆண்டு முதலமைச்சரிடம் விரிவான 650 பக்க வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு இந்த அறிக்கையை ஏற்று மாநிலத்திற்கென தனி கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது.