பள்ளி மாணவர்களுக்கு இலவச கேக், முதல்வர் வாழ்த்து அட்டை வழங்க அரசு ஏற்பாடு
செய்தி முன்னோட்டம்
வருகின்ற நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதன்முறையாக இலவச கேக் மற்றும் முதலமைச்சரின் கையெழுத்துடனான வாழ்த்து அட்டை வழங்கப் பள்ளிக்கல்வித் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இப்புதிய திட்டத்திற்காக தமிழக அரசு ரூ. 10.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் லதா மற்றும் நரேஷ் தலைமையில் நடைபெற்ற முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடனான கூகுள் மீட் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நடைமுறைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய விவரங்கள்
மாணவர்களுக்கு கேக் விநியோகம்
எல்.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இத்திட்டம் சென்றடையும்.
ஒவ்வொரு மாணவருக்கும் தலா 45 கிராம் எடைக் கொண்ட கிரீம் இல்லாத கேக் வழங்கப்படும்.
ஃப்ரூட், வெனிலா, சாக்லேட் உள்ளிட்ட 4 வகையான கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
EMIS தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மாவட்ட விநியோக அலுவலகம் மூலம் வரும் நவம்பர் 10-ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் கேக்குகள் சப்ளை செய்யப்படும்.
சிறப்புப் பரிசு
பாதுகாப்பு & காலாவதி
சப்ளை செய்யப்படும் கேக்குகள் 50 நாட்கள் வரை கெட்டுப்போகாத தன்மையுடையவை.
பள்ளிகள் அவற்றை நவம்பர் 13 வரை பாதுகாப்பாக பராமரித்து, நவம்பர் 13/14 நாட்களில் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்.
குழந்தைகள் தினத்தன்று பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று கேக் மற்றும் வாழ்த்து அட்டையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான இந்த சிறப்புப் பரிசு விநியோகத்தில் எவ்வித புகார்களும் வராத வகையில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.