'முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'க்கு தந்தை வீடு தமிழ்நாடு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சுமார் ரூ.52 லட்சம் ரூபாய் மதிப்பில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலையினை இன்று(நவ.,27) திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், 'பிற்பட்டவர்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் வி.பி.சிங் தான். இவர் கலைஞர் கருணாநிதியை தனது சொந்த சகோதரராக நினைத்தார்' என்றும்,
'தமிழக மக்களின் ரத்த சொந்தமாக வி.பி.சிங் மாறினார்' என்றும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய முதல்வர், "நீதிமன்றங்கள், கல்லூரிகள் போன்ற துறைகளில் நியமனம் செய்யப்படுவதற்கு இன்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் போராட வேண்டிய சூழலே நிலவுகிறது" என்று வருத்தம் தெரிவித்தார்.
முதல்வர்
தமிழ்நாடு மீது அதீத பாசம் கொண்டவர் வி.பி.சிங் - முதல்வர்
தொடர்ந்து, 'இது போன்ற விஷயங்களில் மாற்றம் கொண்டுவர நாம் ஓயாமல் உழைக்க வேண்டும். அதுவே வி.பி.சிங்கிற்கு நாம் செலுத்தும் வீரவணக்கமாக இருக்கும்' என்றும் பேசியுள்ளார்.
தொடர்ந்து, இவரது ஆட்சிக்காலத்தில் தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது,
இலங்கை பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அகில இந்திய தலைவர்களை அழைத்து பேசிய இவர், முதலில் கருணாநிதியையே பேசும்படி கூறினார்.
இதன் மூலம் அவர் தமிழ்நாடு மீது அதீத பாசம் வைத்திருப்பது தெரிகிறது என்று குறிப்பிட்டு பேசினார்.
இதனையடுத்து, 'முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு தாய் வீடு வேறாக இருந்தாலும் தந்தை வீடு தமிழ்நாடு தான்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.