தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 73 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தப் பணிகளில் மாநிலம் முழுவதும் 73 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகள் நிறைவுற்ற நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வரைவுப் பட்டியலை வெளியிட்டனர். சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். அதன்படி சென்னையில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 29.14 லட்சம். அதில், ஆண் வாக்காளர்கள் 14.04 லட்சம், பெண் வாக்காளர்கள் 15.09 லட்சம், இளம் வாக்காளர்கள் 46,200 பேர் மற்றும் மூத்த வாக்காளர்கள் 28,159 பேர்
விவரங்கள்
பெயர் சேர்க்க, திருத்த விண்ணப்பிப்பது எப்படி?
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது பெயர்கள் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் மற்றும் முகவரி உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.