LOADING...
திமுக வெள்ளை அறிக்கை vs தவெக வெள்ளை அறிக்கை ஓர் ஒப்பீடு!
தவெக அரசு தனது நிதிநிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது

திமுக வெள்ளை அறிக்கை vs தவெக வெள்ளை அறிக்கை ஓர் ஒப்பீடு!

எழுதியவர் Vasuki
Jun 17, 2026
12:18 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து தவெக அரசு தனது நிதிநிலை வெள்ளை அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தச் சூழலில், கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற போது அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் விபரங்களுடன் தற்போதைய நிதி நிலவரத்தை ஒப்பீடு குறித்து விரிவாக பார்க்கலாம். தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் கடன் ரூ.13 லட்சம் கோடியாக இருப்பதாகத் தெரிவித்த நிலையில், 2021-இல் திமுக அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடன் சுமை (2011 -2021)

மொத்தக் கடன் உயர்வு

கடந்த 2011-2012 ஆம் நிதியாண்டில் ரூ.1,15,412.38 கோடியாக இருந்த தமிழகத்தின் மொத்த கடன் அளவு, 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் இறுதியில் (2021-22) ரூ.5,70,189.29 கோடியாக உயர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில் கடன் அளவு ரூ.4.5 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்தது. 2011-12 முதல் 2015-16 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ரூ.17,058 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை, அடுத்த ஐந்தாண்டுகளில் (2016-17 முதல் 2020-21) ரூ.1,55,246 கோடியாக அதிகரித்தது. 2011-12 முதல் 2015-16 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் ரூ.17,058 கோடியாக இருந்தது. 2016-17 முதல் 2020-21 வரையிலான ஆட்சியில் ரூ.1,55,246 கோடியாக அதிகரித்தது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடியை வட்டியாக செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டங்கள்

மின் துறை மற்றும் போக்குவரத்துத் துறை

2021 ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின் துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளின் கடன், நிலுவை நிலவரம் குறிப்பிடப்பட்டிருந்தது. 2020-21 ஆம் ஆண்டு வரையிலான மின் துறையின் நிலுவையில் உள்ள உத்தரவாதங்கள் ரூ.82,916 கோடியாகவும், மின் துறையில் நிலுவைக் கடன்கள் ரூ.1,59,668 கோடியாகவும் இருந்தன . 2020-21 வரையிலான மின் துறையின் நிலுவையில் உள்ள உத்தரவாதங்கள் ரூ.82,916 கோடியாகவும், மின் துறையில் நிலுவை கடன்கள் ரூ.1,59,668 கோடியாகவும் இருப்பதாகக் கூறினார். போக்குவரத்துத் துறையில் நிலுவையில் உள்ள உத்தரவாதங்கள் ரூ.4,642 கோடியாகவும், நிலுவை கடன்கள் ரூ.11,840 கோடியாகவும் உள்ளதாகவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Advertisement

தவெக அரசின் வெள்ளை அறிக்கை

ஒட்டுமொத்தக் கடன்

தவெக அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் கடன் சுமை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் கடன் ரூ.13 லட்சம் கோடியாக இருப்பதாகத் தெரிவித்த நிலையில், 2021-இல் திமுக அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2021 இல் ரூ.5.70 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன், தற்பொழுது பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

பற்றாக்குறை

துறை ரீதியான நஷ்டங்கள்

மாநிலத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உள்ளதோடு, ஒவ்வொரு ஆண்டுக்குமான வட்டிச் செலவு மட்டும் ரூ.67,050 கோடியாக அதிகரித்துள்ளது. மின் துறையின் கடன் தற்பொழுது ரூ.2.47 லட்சம் கோடியாகவும், அதன் ஒட்டுமொத்த நஷ்டம் ரூ.1.82 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. போக்குவரத்துக்கழகங்களின் இழப்பு ரூ.72,667 கோடியாக அதிகரித்துள்ளது. திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி முந்தைய 10 ஆண்டுகளில் கடன் ரூ.4.5 லட்சம் கோடி உயர்ந்திருந்த நிலையில், 2026 தவெக அரசின் வெள்ளை அறிக்கையின்படி கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே கடன் அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்கள் சவாலானவை. ஊழலை ஒழிப்பதன் மூலம் தமிழகத்தின் வருவாய் அதிகரிக்கும். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் இந்த இழப்புகளை சரி செய்வோம் என்று தவெக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement