பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்பார் என தகவல்
செய்தி முன்னோட்டம்
பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் ஒரு தேநீர் கூட்டத்தை நடத்தினார்.
பாரதிய ஜனதா கட்சி(பாஜக) உறுப்பினர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தின் மூலம், புதிய அமைச்சர்கள் குழுவில் யார் யார் இருப்பார்கள், யார் இருக்க மாட்டார்கள் என்பது சூசகமாகத் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிருதி இரானி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனுராக் தாக்கூர் மற்றும் நாராயண் ரானே போன்ற மற்ற முக்கிய பாஜக தலைவர்களும் இதில் கலந்து கொள்ளவில்லை.
இந்தியா
சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு இரண்டு சீட்டுகள்
ராஜீவ் சந்திரசேகர், நாராயண் ரானே, பார்தி பவார் மற்றும் ராவ்சாகேப் தன்வே ஆகியோரும் மத்திய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என நம்பப்படுகிறது.
அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர் மற்றும் நிதின் கட்கரி உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் அமைச்சர்களாக பதிவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NDAவில் உள்ள மற்ற கட்சிகளான எச்.டி.குமாரசாமி, ஜெயந்த் சவுத்ரி போன்ற தலைவர்களும் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள்.
சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு இரண்டு அமைச்சரவை சீட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுகவின் கணபதி ராஜ்குமாருடன் மோதி 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.