NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சரணடை அல்லது என் கோபத்தை எதிர்கொள்': பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சரணடை அல்லது என் கோபத்தை எதிர்கொள்': பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை
    தேவகவுடா, தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    'சரணடை அல்லது என் கோபத்தை எதிர்கொள்': பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    May 24, 2024
    09:53 am

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா, தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, பெண்களின் ஆடைகளை களைதல் மற்றும் பாலியல் செயல்களை வலுக்கட்டாயமாக வீடியோ எடுத்தல் உள்ளிட்ட பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை பிரஜ்வல் ரேவண்ணா எதிர்கொள்கிறார்.

    இது சார்பாக வெளியிடப்பட்ட ஒரு பொது கடிதத்தில், தேவ கவுடா, தனது பேரன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனது மனக்கசப்பினை வெளிப்படுத்தினார்.

    மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டத்தின் கீழ் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாக கோரிக்கை விடுத்தார்.

    முன்கதை

    இதற்கு முன்னர் என்ன நடந்தது? 

    கடந்த வருட ஜூன் மாதம், பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் முதலில் வெளிவந்தன.

    எனினும் அதை அவர் "மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள்" என்று தெரிவித்து, அவற்றை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவைப் பெற்றார்.

    இந்த சூழலில், ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, ஹாசன் மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, பாலியல் வீடியோக்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான பென் டிரைவ்கள் வெளிவந்தன.

    இந்த வீடியோ கிளிப்புகள் பிரஜ்வலே படமாக்கியது போல இருந்தது. பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பெண்களின் முகங்களை அந்த வீடியோ காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த வழக்கின் விசாரணை சூடு பெற்ற நிலையில், அவர் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.

    எதிர்வினைகள்

    ரேவண்ணாவின் குற்றச்சாட்டுகளுக்கு குடும்பத்தினர் ரியாக்ஷன்

    "அவர் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், எனது நண்பர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கும் ஏற்படுத்திய அதிர்ச்சி மற்றும் வலியிலிருந்து மீள்வதற்கு எனக்கு சிறிது நேரம் பிடித்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டத்தின் கீழ் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன்" என தேவகவுடா கூறினார்.

    "இந்த நேரத்தில், ரேவண்ணாவை கடுமையாக எச்சரித்து, அவர் எங்கிருந்தாலும் திரும்பி வந்து போலீசில் சரணடையவேண்டும்"

    "இது நான் விடுக்கும் முறையீடு அல்ல, எச்சரிக்கை. இந்த எச்சரிக்கைக்கு அவர் செவிசாய்க்கவில்லை என்றால், அவர் எனது கோபத்தையும் அவரது குடும்ப உறுப்பினர்களின் கோபத்தையும் சந்திக்க நேரிடும்" என்று கவுடாவின் கடிதம் கூறுகிறது.

    இதையே தான், தேவ கவுடாவின் மகனும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்டி குமாரசாமியும் தெரிவித்திருந்தார்.

    embed

    பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை

    I have issued a warning to @iPrajwalRevanna to return immediately from wherever he is and subject himself to the legal process. He should not test my patience any further. pic.twitter.com/kCMuNJOvAo— H D Deve Gowda (@H_D_Devegowda) May 23, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரஜ்வல் ரேவண்ணா
    பிரதமர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரஜ்வல் ரேவண்ணா

    பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமேடிக் பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய MEA நடவடிக்கை  பாலியல் தொல்லை

    பிரதமர்

    லாலன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜேடியுவின் புதிய தலைவராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார் நிதிஷ் குமார்
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் அயோத்தி
    காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை அமித்ஷா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025