NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தவறான விளம்பரங்களை வெளியிட்டால் 1 கோடி ரூபாய் அபராதம்': பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தவறான விளம்பரங்களை வெளியிட்டால் 1 கோடி ரூபாய் அபராதம்': பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 
    பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும்.

    'தவறான விளம்பரங்களை வெளியிட்டால் 1 கோடி ரூபாய் அபராதம்': பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 22, 2023
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் என்று கூறி "தவறான" விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும்.

    தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இதனையடுத்து, ஆகஸ்ட் 23, 2022 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் ஆகியவற்றிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் மனுவை நேற்று நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரித்தது.

    பைஜ்க்வெல்

    ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ. 1 கோடி அபராதம்

    அந்த சுருக்கமான விசாரணையின் போது, ​​நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை பரப்ப வேண்டாம் என்று பதஞ்சலியிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    "பதஞ்சலி ஆயுர்வேத் தவறான விளம்பரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற மீறல்களை நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும்...'' என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

    ஒரு குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்த முடியும் என்று தவறான கூற்றை விளம்பரம் செய்தால், அப்படிப்பட்ட ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், இது போன்ற தவறான மருத்துவ விளம்பரங்களுக்கு தீர்வு காணுமாறு மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    உச்ச நீதிமன்றம்

    சட்டம் பேசுவோம்: பதினாறா? பதினெட்டா? ஒப்புதலுக்கான வயதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்  இந்தியா
    ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம் இந்தியா
    கர்நாடகத்தை கண்டித்து டெல்டா விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு போராட்டம்
    பிறக்காத குழந்தைக்கு கவலை தெரிவித்த தலைமை நீதிபதி: கருக்கலைப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு இந்தியா

    இந்தியா

    நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பேருந்துகளுக்கு தடை, செயற்கை மழை- காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசின் திட்டம் டெல்லி
    முகமது ஷமிக்கு ஆதரவாக நின்ற ராகுல் காந்தி; பழைய வரலாற்றை புரட்டும் காங்கிரஸ் முகமது ஷமி
    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025