Page Loader
ஐடி தம்பதிகளின் விவாகரத்து வழக்கு - நீதிபதிகள் எழுப்பிய கேள்வி 
ஐடி தம்பதிகள் விவாகரத்து வழக்கு - நீதிபதிகள் எழுப்பிய கேள்வி

ஐடி தம்பதிகளின் விவாகரத்து வழக்கு - நீதிபதிகள் எழுப்பிய கேள்வி 

எழுதியவர் Siranjeevi
Apr 24, 2023
11:36 am

செய்தி முன்னோட்டம்

பெங்களூர் சாப்ட்வேர் தம்பதிகள் இருவர் விவாகரத்து கேட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒருவர் பகல் நேரப்பணியிலும், ஒருவர் இரவு நேரப்பணியிலும் வேலை செய்து வருகிறீர்கள். இதனால் திருமண உறவை பேணுவதற்கு நேரம் எங்கே உள்ளது. எனவே விவாகரத்தில் உங்களுக்கு வருத்தம் இல்லை என்றாலும், திருமணத்தில் வருத்தம் உள்ளது. இதனால் திருமணத்திற்கு மற்றொரு வாய்ப்பு தரக்கூடாதா என கேட்டுள்ளனர். மேலும், பெங்களூர் என்பது அடிக்கடி விவாகரத்து தரக்கூடிய இடமும் இல்லை. நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழலாமே எனவும் நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

பெங்களூர் விவாகரத்து

ஐடி தம்பதிகளின் விவாகரத்து - சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்வி

நீதிபதிகள் இவ்வளவு கூறியும் சம்மதிக்காத தம்பதிகள், இந்து திருமண சட்டம் பிரிவு 13-பி'யின்படி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர். மனைவிக்கும் ரூ.12.50 லட்சம் ஜீவனாம்சம் தந்து விட கணவர் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அந்த தம்பதியருக்கு சுப்ரீம் கோர்ட்டு விவாகரத்து வழங்கியது. இதுகுறித்து பேசிய நீதிபதிகள், இந்த வழக்கில் இரு தரப்பு ஒப்பந்தத்தையும் அரசியல் சாசனம் பிரிவு 142-படி, தாக்கல் செய்துள்ள மனுவையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம். எனவே, பரிசீலனையில்,ஒப்பந்தங்களின் விதிமுறைகள் சட்டப்பூர்வமானது., 1955ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டம் பிரிவு '13-பி'-யின் கீழ் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து உத்தரவு பிறப்பிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.