Page Loader
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பயங்கர நில அதிர்வு 
இன்று பிற்பகல் டெல்லி மற்றும் அதை ஒட்டியுள்ள நகரங்களில் பயங்கர அதிர்வு உணரப்பட்டது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பயங்கர நில அதிர்வு 

எழுதியவர் Sindhuja SM
Nov 06, 2023
04:37 pm

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டெல்லியில் பயங்கர நில அதிர்வு உணரப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு, நேபாளத்தில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு, இன்று நேபாளத்தில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால், இன்று பிற்பகல் டெல்லி மற்றும் அதை ஒட்டியுள்ள நகரங்களில் பயங்கர அதிர்வு உணரப்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தின் மையம் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் இருந்து வடக்கே 233 கிலோமீட்டர் தொலைவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, நேபாளத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 157 பேர் உயிரிழந்தனர். இது 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு நேபாளத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் ஆகும்.

ட்விட்டர் அஞ்சல்

டெல்லியில் பயங்கர நில அதிர்வு