
தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள்; அதிக வாக்காளர் இருக்கும் தொகுதி எது தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை, இன்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் தற்போது 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அதில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகம்.
இது தவிர மேலும் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அதிக வாக்காளர் இருக்கும் தொகுதியாக ஐ.டி ஊழியர்கள் அதிகம் வசிக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் கண்டறியப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 6.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது..!#SunNews | #ElectoralRoll | #ElectionCommission pic.twitter.com/4e6JGdhycd
— Sun News (@sunnewstamil) October 29, 2024
விவரங்கள்
குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதி எது?
தமிழ்நாட்டில் பதிவு செய்த 6.27 கோடி வாக்காளர்களின், ஆண்கள் வாக்காளர்கள் மொத்தம் 3.07 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 3.19 கோடி பேரும், 3ஆம் பாலினத்தவர் 8,964 பேரும் உள்ளனர்.
குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, கீழ்வேளூர் தொகுதி கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 1.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் எனவும், அவர்களுள், ஆண்கள் 85,065 பேரும், பெண்கள் 88,162 பேரும், 3 ஆம் பாலினத்தவர் 3 பேரும் உள்ளனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல், அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் அங்கே சென்று தங்கள் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.
இது தவிர, https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.