மே 31 முதல் அமேசானில் ஷாப்பிங் செய்யும் பொருட்களின் விலை உயரப் போகிறது!
மக்கள் விரும்பும் அமேசான் ஷாப்பிங் தளம், அதன் அற்புதமான சலுகைகளுக்குப் பெயர் பெற்றிருந்தாலும் தற்போது விற்பனைக் கட்டணம் மற்றும் கமிஷன் கட்டணங்களைத் திருத்த முடிவு செய்துள்ளது. அறிக்கையின்படி, மே 31 முதல் மின்னணு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் போன்ற பல வகைப் பொருட்களுக்கு புதிய கட்டணங்கள் விதிக்கப்படும். இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையாகும் வாய்ப்பு உள்ளது. இப்போது, கட்டண உயர்வால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தயாரிப்புகளின் வகைகளைப் பார்ப்போம். அமேசான் ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றின் விற்பனையாளர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமேசானில் ஷாப்பிங் செய்யும் பொருட்களின் விலை உயரப் போகிறது
இதுதவிர, ஆர்டர் செய்த பொருட்களை திரும்பப் பெறுவதற்கான கட்டணத்தில் கணிசமான அளவு அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய்க்குஅல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள பொருட்களுக்கு, விற்பனையாளரின் கட்டணம் 5.5% முதல் 12% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 500 ரூபாய்க்கு மேல் உள்ள பொருட்களுக்கு, விற்பனையாளர் கட்டணம் 15% ஆக இருக்கும். ஏற்கனவே, அமேசான் சமீபத்தில் பல்வேறு துறைகளில் சுமார் 500 இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான அறிக்கைகளின்படி, அடுத்த சுற்று பணிநீக்கங்கள் தோராயமாக 9,000 ஊழியர்களை பாதிக்கும். அமேசான் நிறுவனம் மட்டும் ஆட்குறைப்பு செய்யவில்லை, கூகுள் போன்ற பல தொழில்நுட்ப நிறுவனங்களும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தகது.