3 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல்: 41 உறுப்பினர்கள் ஏற்கனேவே போட்டியின்றி தேர்வு
இன்று நடைபெறவிருக்கும் ராஜ்யசபா இருபதாண்டுத் தேர்தல்களில், ஏற்கனவே 41 வேட்பாளர்கள் எதிர்ப்பின்மையால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 10 ராஜ்யசபா இடங்களுக்கும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இன்று மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். குறுக்கு வாக்குப்பதிவு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், அரசியல் கட்சிகள் தங்கள் எம்.எல்.ஏ.க்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
41 உறுப்பினர்கள் ஏற்கனேவே போட்டியின்றி தேர்வு
இன்று தேர்தல் நடைபெறவுள்ள 56 ராஜ்யசபா தொகுதிகளில் நின்ற, 41 உறுப்பினர்கள் ஏற்கனேவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 27 அன்று முறையாக அறிவிக்கப்படும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 ராஜ்யசபா தொகுதிகளுக்கு பாஜக 8 வேட்பாளர்களையும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 3 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன. பாஜக மற்றும் எஸ்பி ஆகிய இரு கட்சிகளும் ஏழு மற்றும் மூன்று உறுப்பினர்களை ராஜ்யசபாவிற்கு போட்டியின்றி அனுப்ப உள்ளது. கர்நாடகாவில் காலியாக உள்ள 4 இடங்களை நிரப்புவதற்காக இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ் அஜய் மக்கன், சையத் நசீர் உசேன் மற்றும் ஜி.சி. சந்திரசேகர் ஆகியோரை களத்தில் இறக்கியுள்ளது.