NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்
    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஊட்டியில் சிறப்பு மலை ரயில் இயக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணத்திற்காக ஊட்டி மலையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கி வருகிறது.

    பொதுவாகவே மேட்டுப்பாளையம் - குன்னூர் - ஊட்டி இடையேயான மலை ரயிலில் பயணிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அதிக ஆர்வம் இருக்கும்.

    இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக்கிழமை (செப்டம்பர் 7) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்டம்பர் 8) மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்தது.

    அதன்படி, குன்னூரில் இருந்து ஊட்டி வரை இரண்டு நாட்களும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    இதன் மூலம் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் குடும்பத்துடன் இயற்கை காட்சிகளை கண்டுகளித்துக் கொண்டே பயணிக்கலாம்.

    ஓணம்

    ஓணம் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள்

    விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு கேரளாவில் விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் திருவிழா வர உள்ளது.

    இதையொட்டி செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிறப்பு ரயில்கள் ஊட்டியிலிருந்து மேலே குறிப்பிட்ட தினங்களில் குன்னூருக்கு ஒரு முறையும், ஊட்டியிலிருந்து கேத்திக்கு மூன்று முறையும் இயக்கப்பட உள்ளது.

    இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்களுக்கும் பலனளிக்கும் என்பதால் அவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதற்கிடையே சனிக்கிழமையான இன்று பலரும் இந்த சிறப்பு மலை ரயிலை பயன்படுத்தி பயணம் செய்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஊட்டி
    ஊட்டி
    விநாயகர் சதுர்த்தி
    ரயில்கள்

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    ஊட்டி

    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தமிழ்நாடு
    ஊட்டியில் அதிகளவு சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு  ஊட்டி

    ஊட்டி

    ஊட்டியில் தாறுமாறாக விலை உயர்வு - சுற்றுலா பயணிகள் விடுத்த கோரிக்கை  ஊட்டி
    ஊட்டியின் அழகை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சி துவக்கம்  தமிழ்நாடு
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்  ஊட்டி
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு  தமிழக அரசு
    பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது  சிவகங்கை
    இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது? இந்தியா
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  காவல்துறை

    ரயில்கள்

    ரயில் சேவை விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இந்திய ரயில்வே இந்தியா
    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து  கேரளா
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில் நிலையம்
    தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025