Page Loader
தெற்கு ரயில்வேயில் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்
திண்டுக்கல் ரயில் நிலையத்தில், ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் பெட்டிகளில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார், சிந்து கணபதி.

தெற்கு ரயில்வேயில் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் நியமனம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2024
05:34 pm

செய்தி முன்னோட்டம்

தெற்கு ரயில்வேயின் பாராட்டுக்குரிய முயற்சியாக திருநங்கை ஒருவரை பயண டிக்கெட் பரிசோதகராக நியமித்துள்ளது. 37 வயதான சிந்து கணபதி என்ற பெயர்கொண்ட அந்த திருநங்கை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில், ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் பெட்டிகளில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில், 2003ல் ரயில்வேயில் ஆண் ஊழியராக பணிக்கு சேர்ந்த ஜி.சிந்தனுக்கு, அவரது உடலமைப்பில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இதனால் பல அவமானங்களை அவர் சந்திக்க நேர்ந்ததாகவும் அவர் கூறுகிறார். இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளான சிந்தன், 2010ல் வேலையை விட்டுவிட்டார். அதன்பின்னர், திருநங்கை சமூகத்தருடன் வாழ்க்கையை தொடங்கிய சிந்தன், 18 வருடங்கள் கழித்து மீண்டும் ரயில்வேயில் சேர முயன்றார்.

தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்

உடன் நின்ற தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன்

"அதிகாரிகள் எனக்கு மீண்டும் வேலை தர விரும்பினாலும், எனது பாலினம் முழுவதுமாக மாறியதால் அவர்கள் கொஞ்சம் தயங்கினார்கள். அப்போது தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியனின் (SRMU) நிர்வாகிகள் எனக்காக அதிகாரிகளிடம் கடுமையாக வாதிட்டனர்," என்று சிந்து கூறுகிறார். "பின்னர், ரயில்வே மருத்துவர்களால் மருத்துவப் பரிசோதனை செய்து, அதன் முடிவின் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் எனது பாலின மாற்றத்தை ஏற்றுக்கொண்டு என்னை ஒரு பெண் ஊழியராக நடத்தியது," என்று அவர் கூறினார். கடந்த வாரம் திண்டுக்கல்லில் டிடிஇயாக சிந்து நியமிக்கப்பட்டார். "திருநங்கைகள் இன்னும் சிறந்த வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க நிறைய போராட வேண்டும். மாநில மற்றும் மத்திய அரசு வேலைகளில் இடஒதுக்கீடு அவர்களுக்கு சமூகத்தில் உள்ள கெட்ட பிம்பத்தை துடைத்து, மரியாதைக்குரிய பதவிகளை பெற்றுத்தரும்,"என்கிறார் அவர்.