Page Loader
சோனியா காந்தி மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாற வாய்ப்பு

சோனியா காந்தி மக்களவையில் இருந்து மாநிலங்களவைக்கு மாற வாய்ப்பு

எழுதியவர் Sindhuja SM
Feb 13, 2024
10:43 am

செய்தி முன்னோட்டம்

சோனியா காந்தி மக்களவையில் இனி போட்டியிட போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக அவரது மகளும் காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தி மக்களவையில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தானை சேர்ந்த ஒரு ராஜ்யசபா பதவிக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று பேசப்படுகிறது. பிரியங்கா காந்தி வத்ரா மக்களவை தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நிலை சரியில்லாத சோனியா காந்தி(77), வரும் ராஜ்யசபா தேர்தலில் ஜெய்ப்பூரில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. எனினும், மாநிலங்களவைக்கு மாறுவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ்

முதல் முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட இருக்கும் பிரியங்கா காந்தி 

சோனியா காந்தி மாநிலங்களவைக்கு மாறினால், காங்கிரஸைப் பொறுத்தவரை, அது ஒரு பெரிய மாற்றமாக இருக்கும். சோனியா காந்தி 2006 ஆம் ஆண்டு முதல் முறையாக மக்களவை தேர்தலின் போது ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் செயல் திறன் மிகக் குறைவாக இருந்தது. அப்போது, காங்கிரஸின் கோட்டையாக இருந்த உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி பாஜகவின் ஸ்மிருதி இரானியால் தோற்கடிப்பட்டார். அப்போது கூட சோனியா காந்தி தனது தொகுதியான ரேபரேலியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், பல ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா காந்தியும் முதல் முறையாக வரும் மக்களவை தேர்தலின் போது போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.