Page Loader
கர்நாடக முதல்வராகிறாரா சித்தராமையா: டிகே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கூட்டம் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

கர்நாடக முதல்வராகிறாரா சித்தராமையா: டிகே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி

எழுதியவர் Sindhuja SM
May 17, 2023
01:09 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே.சிவகுமாரும் பதவியேற்பார்கள் என்ற செய்தி வெளியாகி உள்ளது. கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மதிய உணவுக்குப் பிறகு பதவியேற்பு விழா நடைபெறும் என்றும், சித்தராமையா தனியாக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கூட்டம் நாளை பிற்பகல் 3.30 மணியளவில் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. கர்நாடக முதல்வர் பதவிக்கு போட்டியிடும் மற்றொரு போட்டியாளரான டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

details

நேற்று ராகுல் காந்தியுடன் மல்லிகார்ஜுன் கார்கே பேச்சு வார்த்தை நடத்தினார் 

காங்கிரஸ் தலைவர்கள் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகிய இருவரும் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு வருகின்றனர். அவர்கள் இருவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை நேற்று தனித்தனியாக சந்தித்து பேசினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவுக்கு பொறுப்பான AICC பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் பொதுச் செயலாளர்(அமைப்பு) கே.சி.வேணுகோபால் ஆகியோர் கார்கேவுடன் 90 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், காங்கிரஸ் 135 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி, வெற்றி பெறுவதற்கு சித்தராமையா மற்றும் சிவக்குமார் இருவரும் முக்கியப் பங்காற்றி உள்ளனர்.