Page Loader
7 வயது முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் விசாரணை 
குழந்தையின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் எஃப்ஐஆரில் இல்லை

7 வயது முஸ்லீம் சிறுவன் வகுப்பறையில் தாக்கப்பட்ட சம்பவம்: உச்ச நீதிமன்றம் விசாரணை 

எழுதியவர் Sindhuja SM
Sep 25, 2023
05:33 pm

செய்தி முன்னோட்டம்

7 வயது இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு ஒரு ஆசிரியை உத்தரவிட்ட சம்பவம் சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்தது. இது குறித்து இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது, இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது மாநிலத்தின் மனசாட்சியை அதிர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்குமாறு உத்தரவிட்டது. உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள நேஹா பப்ளிக் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பள்ளி ஆசிரியை மாணவர்களிடம் ஒரு சிறுவனை அறையும்படி கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாக பரவியது. அந்த வைரல் வீடியோவை இங்கு காணலாம்.

டிவ்க்ஜ்

குழந்தையின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் எஃப்ஐஆரில் இல்லை

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது கவலைக்குரியது என்றும், இது வாழ்வதற்கான உரிமை சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் கூறினர். மேலும், இந்த வழக்கை அக்டோபர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாணவர்களின் கவுன்சிலிங் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும், பாதிக்கப்பட்ட குழந்தையின் கல்விக்கான பொறுப்பை ஏற்கவும் உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. குழந்தையின் தந்தை கூறிய குற்றச்சாட்டுகள் எஃப்ஐஆரில் இல்லாதது குறித்து விமர்த்தித்த உச்ச நீதிமன்றம், அதற்கு கடுமையான ஆட்சேபனைகளையும் பதிவு செய்தது. மதத்தின் காரணமாக தான் தனது மகன் தாக்கப்பட்டான் என்று பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை வாக்குமூலம் அளித்திருந்தார். ஆனால் அது எஃப்ஐஆரில் குறிப்பிடப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.