
இஸ்லாமிய சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியை பள்ளி மாணவர்களிடம் ஒரு சிறுவனை அறையும்படி கூறியது கேமராவில் பதிவாகியுள்ளது.
8 வயதான பாதிக்கப்பட்ட சிறுவன் கணக்கு வாய்ப்பாடுகளை படிக்காததால் கோபடைந்த அந்த ஆசிரியை, அந்த சிறுவனை அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிடுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.
பாதிக்கப்பட்ட சிறுவன் அசையாமல் அவமானத்துடன் அங்கு நின்று, தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் தன்னை தாக்குவதை தாங்கி கொண்டிருப்பதும் அந்த வீடியோவில் நன்றாக தெரிந்தது.
அது போக, அந்த சிறுவன் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் என்று அந்த ஆசிரியை கூறுவதையும் நம்மால் கேட்க முடிகிறது.
டிவ்ன்ல்
"குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்தாத முஸ்லிம் தாய்மார்களே..": ஆசிரியை
அந்த சிறுவனை "முஸ்லிம் சிறுவன்" என்று அழைத்த அந்த ஆசிரியை , "குழந்தைகளின் படிப்பில் கவனம் செலுத்தாத முஸ்லிம் தாய்மார்களே குழந்தைகள் கல்வியில் தோல்வியடைவதற்கு காரணம்" என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
அந்த ஆசிரியையின் செயல் மதப் பிரச்சனையை தூண்டுவது போல் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வீடியோவில், அந்த ஆசிரியை ஒரு மதத்தை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அதை போலீசாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
"இது குறித்து அடிப்படை கல்வி அலுவலரிடம் புகார் அளித்து, அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று காவல்துறை கண்காணிப்பாளர் சத்யநாராயண் பிரஜாபத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாக பரவி வரும் ஆசிரியையின் வீடியோ
Teacher Encourages Students to Assault Fellow Classmate in UP’s Muzaffarpur#DisturbingIncident #Education #StudentSafety #SocialJustice #PoliceInvestigation #Newsupdate #newspaper #Dailynews #Headlines #Breaking #breakingnews #bnnbreaking pic.twitter.com/2kJdfdAqmW
— Rafia Tasleem (@rafia_tasleem) August 26, 2023
டிஜிவ்க்
"பள்ளி மீது புகார் அளிக்க போவதில்லை": சிறுவனின் தந்தை
அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக குழந்தை உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாதிப்பட்ட சிறுவனின் தந்தை, பள்ளி நிர்வாகத்துடன் தாங்கள் சமரசத்திற்கு வந்துள்ளதால் பள்ளி மீது புகார் அளிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.
எனினும், தன் குழந்தையை இனி அந்த பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆசிரியை திரிப்தா தியாகியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
அதற்கு பதிலளித்த அவர், "நான் மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் அந்த சிறுவனை அடிக்க முடியவில்லை. அதனால் பிற மாணவர்களை அடிக்க சொன்னேன்" என்று கூறியதாக கூறப்படுகிறது.
ஹக்ஜ்கவ்ஜ்
"இந்தியா தீயில் எரிகிறது": ராகுல் காந்தி
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனித இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுகிறார்கள். ஒரு ஆசிரியரால் இதைவிட மோசமான ஒரு விஷயத்தை இந்த நாட்டிற்கு செய்துவிட முடியாது. இந்தியா தீயில் எரிகிறது. இதே மண்ணெண்ணையைத்தான் பாஜகவினர் பரப்பி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தீக்கிரையாக்கியுள்ளனர். குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுக்காதீர்கள். நாம் அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு அன்பை கற்பிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தெலுங்கானா எம்பி ஓவைஸி, இதற்கு எதிராக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.