
நித்தியானந்தா உயிரிழந்து விட்டாரா? அவரது 4,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் யாருக்கு?
செய்தி முன்னோட்டம்
திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் ஆசிரமங்களை நிறுவி, ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தி பிரபலமான சுவாமி நித்தியானந்தா, பல சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மையமாக இருந்தார்.
பல சர்ச்சைகளில் சிக்கிய அவர் ஈக்குவடோர் தீவுகளுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது.
அங்கிருந்து கைலசா என தனி நாட்டை நிறுவி ஆட்சி செய்துவருவதாக கூறிய நித்தியானந்தா அங்கிருந்தபடி இணையம் வாயிலாக தன்னுடைய சிஷ்யர்களிடம் சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்.
இந்நிலையில், நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் ஒரு ஆன்மிக சொற்பொழிவில், நித்தியானந்தா இந்து தர்மத்தை பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் காலை முதல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஆனால், இந்த தகவலின் உண்மைத் தன்மை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சர்ச்சைகள்
தொடர் சர்ச்சைகளும், கண்ணாம்பூச்சி ஆட்டங்களும்
பெங்களுருவில் பிடதி ஆஸ்ரமத்தை நிறுவி நடத்தி வந்த நித்யானந்தா, நடிகை ஒருவருடன் இருக்கும் வீடியோ டிவியில் வைரலானதை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார்.
அமலாக்கத்துறை, CID என தொடர்ச்சியாக புலனாய்வு துறையினர் அவர் மீது வழக்குகள் பதிய, திடீரென மாயமானார்.
பின்னரே கைலாஸா என்ற தனி நாட்டை நிறுவி அங்கே தனது சிஷ்யர்களுடன் ஆட்சி செய்து வருவதாகவும், ஐ.ந சபையின் ஒப்புதல் பெற்றதாகவும் கூறினார்.
கைலாசாவிற்கு வர விரும்புவர்களுக்கு தனி பாஸ்போர்ட் வழங்கப்படுவதாகவும் கூறினார்.
கைலாஸா எங்கு உள்ளது என கூறப்போவதாக கடந்த ஆண்டு அவர் கூறிய நிலையில், நாட்டில் பல இடங்களில் கைலாஸாவின் கிளைகளில் இருப்பதால், அங்கிருந்த படியே சிவனை அடையாளம் என குண்டை தூக்கி போட்டார்.
சொத்து
நித்யானந்தாவின் சொத்துக்கள் என்னவாகும்?
நித்தியானந்தாவின் மறைவு கைலாஸா போல பிராங்க்காக இருக்கும் என பலரும் கூறி வரும் நிலையில், ஒரு வேளை அவரது மறைவு உண்மையாக இருந்தால், அவருடைய 4000 கோடி ரூபாய் சொத்துகள் யாருக்கு போகும் என்ற கேள்வியும் இணையத்தில் உலவுகிறது.
நித்யனந்தாவின் பிரதான சிஷ்யையாக அறியப்படும் நடிகை ரஞ்சிதாவிடம் தான் அந்த சொத்தின் உரிமை உள்ளது என ஒரு சில ஊடகங்கள் கூறுகின்றன.
மறுபுறம், புலனாய்வுத்துறை வழக்குகள் அவர் மேல் இருப்பதால் அவரது சொத்துகள் அனைத்தும் அரசு வசமே செல்லும் எனவும், வழக்கு முடிந்த பின்னர் தான் அடுத்த நடவடிக்கை எனவும் கூறப்படுகிறது.