தனியார் பள்ளி அங்கீகார லஞ்ச வழக்கு: 5 மாதங்களாக தேடப்பட்ட திமுக முன்னாள் MLA முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்
செய்தி முன்னோட்டம்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் சுமார் ரூ.400 கோடி வரை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று திடீரெனச் சரணடைந்தார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட அதே லஞ்ச ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முத்துக்குமாரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சரண்
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரண்
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சென்னை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக இன்று காலை நேரில் ஆஜராகிச் சரணடைந்தார்.
விருதாச்சலம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான முத்துக்குமார், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்த லஞ்ச வழக்கில் முக்கியப் புள்ளிகள் அடுத்தடுத்துக் கைது செய்யப்படுவதும் சரணடைவதும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.