நாடாளுமன்றத்திலிருந்து நீக்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவின் மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த டிசம்பர் 8 -ஆம் தேதி, லோக்சபாவில் கேள்விகேட்க ரொக்கப் பணம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவரை நாடாளுமன்ற அவையிலிருந்து நீக்க பரிந்துரைத்தது, மக்களவை நெறிமுறைக் குழு.
இதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார் மஹுவா மொய்த்ரா.
நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரின் மனுவை பெற்றுக்கொண்டு, வழக்குக் கோப்புகளை இன்னும் ஆய்வு செய்யாததால், விசாரணையை ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
card 2
அவையில் கேள்வி கேட்க, தொழிலபர் ஹிராநந்தினியிடம் பணம் பெற்ற மஹுவா மொய்த்ரா
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி குழு ஆகியோரை குறிவைத்து, நாடாளுமன்றத்தில் கேள்விகளைக் கேட்க, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் இருந்து, மஹுவா பணம் பெற்றதாக, பாரதிய ஜனதா கட்சி (BJP) எம்.பி. நிஷிகாந்த் துபே என்பவர் குற்றம் சுமத்தினார்.
அதனை தொடர்ந்து, மக்களவை நெறிமுறைக் குழு அவரிடம் விசாரணை நடத்தியது.
அதன் இறுதியில், மேற்கு வங்காளத்தில் எரிசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை இழந்த பிறகு, அதானி குழுமத்தை குறி வைத்து, ஹிரானந்தனி, மஹுவா மொய்த்ராவிடம் கேட்டுக் கொண்டார் என்று அக்குழுவின் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும், மஹுவா மொய்த்ராவின் முன்னாள் கூட்டாளியும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் அனந்த் தெஹாத்ராய் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் தான் நிஷிகாந்த் துபே புகார் அளித்துள்ளார்.
card 3
விரைவில் சிபிஐ விசாரணை தொடங்கும்
நீக்கம் செய்யப்பட்டதன் மூலம் மஹுவா மொய்த்ரா வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாது.
அவரது நாடாளுமன்றக் கணக்கு உள்நுழைவு விவரங்களைப் பகிர்ந்ததற்காகவும், சட்டவிரோதமாக ஹிராநந்தனியிடம் இருந்து பரிசுகளையும், ரொக்கமாக பணமாக பெற்றதற்காகவும், நெறிமுறைக் குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அதனால், அமலாக்க துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
மேலும், மஹுவாவின் நாடாளுமன்றக் கணக்கை, ஹிரானந்தனியின் அலுவலகம் துபாயில் இருந்து அணுகியதால், தேசியப் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவித்ததற்காக அவர் குற்றவாளி என்று குழு குறிப்பிட்டுள்ளது.
அதனால், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) குழுவானது நிறுவன விசாரணையைத் தொடங்குமாறு அரசுக்கு பரிந்துரைத்தது.
இதனையடுத்து, இந்த வழக்கில் முதற்கட்ட எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் சிபிஐ விசாரணை தொடங்கும்.