Page Loader
ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
ஸ்டர்லைட் தொடர்பான வழக்கு - வேதாந்த நிறுவனம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

எழுதியவர் Nivetha P
Sep 01, 2023
06:08 pm

செய்தி முன்னோட்டம்

சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படும் காரணத்தினால் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டர்லைட் ஆலையினை மூட வேண்டும் என்று கோரி பல்வேறு தரப்பினரோடு பொது மக்களும் பெரும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது கூட்டத்தினை கலைக்க காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக அரசு இந்த ஆலையினை உடனடியாக மூடி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது.

உத்தரவு 

அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்த வேதாந்தா நிறுவனம் 

இதன்படி இந்த ஆலை கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசினை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதற்கான விசாரணைகள் நடந்து வருகிறது. இதனிடையே, வேதாந்தா நிறுவனம் ஸ்டர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி.,அமர்வில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தது. இதுதொடர்பான விசாரணை கடந்த ஆகஸ்ட் 22-23 தேதிகளில் நடக்கவிருந்த நிலையில், அன்றைய தினங்கள் விசாரணை மேற்கொள்ளவில்லை. அதனால், இதுகுறித்த விசாரணை இன்று(செப்.,1)நடந்தது. இதில், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அரசியல் சாசன அமர்வு விசாரணை முடிந்தப்பின்னரே ஸ்டர்லைட் ஆலை குறித்த வழக்கு விசாரிக்கப்படும் என்றுக்கூறி உத்தரவு பிறப்பித்துள்ளார்.