அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி
தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, அவர் இன்று சிறையிலிருந்து வெளியில் செல்ல அனுமதியளித்தும், ஜூன் 2ஆம் தேதிக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடையுமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு மீதான சுருக்கமான விசாரணைக்குப் பிறகு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை அறிவித்தது. நடப்பு மக்களவைத்தேர்தல்களில், குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் டெல்லி மற்றும் பஞ்சாபில், கட்சிக்காக கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு ஜூன் 2ஆம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சரண் அடைய வேண்டும் - உச்சநீதிமன்றம்#Kejriwal | #delhi | #ThanthiTV pic.twitter.com/bT2S9Lkawm— Thanthi TV (@ThanthiTV) May 10, 2024