Page Loader
சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு
சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு

சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு

எழுதியவர் Nivetha P
Sep 07, 2023
02:51 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தங்கள் கண்டனத்தினை தெரிவித்து வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் என 262பேர் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிய கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே மீதும் வழக்குபதியப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மனு 

உதயநிதி மீது ஓரிடத்தில் கூட எப்.ஐ.ஆர்.பதியவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனிடையே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவியிலிருந்து நீக்கக்கோரி சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பாஜக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், தமிழ்நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு எதிராக உதயநிதியின் பேச்சு அமைந்துள்ளது. சனாதனத்தினை பின்பற்றும் மக்களின் உணர்வுகளை அவர் புண்படுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார்கள் அளிக்கப்பட்டும் ஒரு இடத்தில் கூட அவர்மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலின் பேசிய அதேமேடையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபு அமைதியாக அமர்ந்திருந்தது பதவியேற்கும் பொழுது அவர் எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது. இதனால், இவர்களை பதவியிலிருந்து சட்டரீதியாக நீக்கம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.