LOADING...
IIT சென்னையில் இடம்பிடித்து பழங்குடியின மாணவி சாதனை; முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு
IIT சென்னையில் இடம்பிடித்து பழங்குடியின மாணவி சாதனை

IIT சென்னையில் இடம்பிடித்து பழங்குடியின மாணவி சாதனை; முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2025
04:34 pm

செய்தி முன்னோட்டம்

சேலம் மாவட்டத்திலுள்ள கல்வராயன் மலையில் வசிக்கும் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி, இந்தியப் பொறியியல் நுழைவுத் தேர்வில் (JEE) உயரிய தரவரிசையைப் பெற்று, சென்னை ஐ.ஐ.டி-யில் சேர்ந்துள்ளார். அவரது சாதனைக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். கருமந்துறை பழங்குடியினத்தை சேர்ந்த ஆண்டி-கவிதா தம்பதியரின் மகளான ராஜேஸ்வரி, அரசு பயிற்சி மையத்தில் JEE தேர்வுக்குத் தயாராகி, அகில இந்திய அளவில் 417வது இடத்தைப் பெற்று, IIT சென்னையில் சேர உள்ளார். 10ம் வகுப்பில் 438/500 மற்றும் 12ம் வகுப்பில் 521/600 மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்கிய ராஜேஸ்வரி, கல்வராயன் மலையில் உள்ள அரசு பழங்குடியினர் பள்ளியில் இருந்து IIT சேரும் முதல் மாணவியாக சாதனை படைத்துள்ளார்.

பாராட்டு

பாராட்டுகளும் உறுதிமொழிகளும்

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தந்தையை இழந்தாலும், அவரது கனவைக் கைவிடாமல், அரசு உறைவிடப் பள்ளியில் கல்வி பயின்று IIT சேரும் பெருமையைப் பெற்றுள்ள ராஜேஸ்வரிக்கு என் Salute! அவரது முழு உயர் கல்விச் செலவுகளை தமிழக அரசு ஏற்கும்," என உறுதியளித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,"தந்தையைஇழந்த நிலையிலும், மனவலிமையுடன் முயன்ற ராஜேஸ்வரியின் வெற்றி பெருமைக்குரியது. அவர் உயர்கல்வியில் தொடர்ந்து சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்." "ராஜேஸ்வரியின் பொருளாதார பின்னணியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அவருடைய கல்விச் செலவுகளை ஏற்க வேண்டும். ஏற்காவிட்டால், அதிமுக அந்த செலவுகளை ஏற்க தயாராக உள்ளது" என வலியுறுத்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

முதல்வர் அறிக்கை

ட்விட்டர் அஞ்சல்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை