
திருநெல்வேலி விபத்து: கார் மோதியதில் 20 அடி உயரம் காற்றில் தூக்கி எறியப்பட்ட பெண்
செய்தி முன்னோட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில், அதிவேகமாக வந்த செடான் கார் மோதியதில் 61 வயது பெண்மணி ஒருவர் 20 அடி உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டார்.
இந்த விபத்தின் CCTV காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி கணியூர் பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண், சாலையைக் கடக்க பாதசாரிகள் காத்திருக்கும் இடத்தில் நின்றுள்ளார்.
அப்போது சீறி வந்த செடான் கார் ஒன்று அவர் மீது மோதியதில், காற்றில் வீசப்பட்டு, தூக்கி எறியப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே கோமதி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாக்பூர்
60 வயது முதியவர் பேருந்தில் சிக்கி உயிரிழந்தார்
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பதிவாகும் தொடர் சாலை விபத்துகளில் இது சமீபத்தியது.
நாக்பூரில், திங்கள்கிழமை, வேகமாக வந்த பேருந்து மோதி முதியவர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகளில், அந்த நபர், சைக்கிள் ஓட்டிச் செல்வதும், பேருந்தில் அடிபட்டதையும் காட்டுகிறது.
காயமடைந்தவரை விட்டுவிட்டு ஓட்டுநர் தொடர்ந்து பஸ்-ஐ ஓட்டி சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் பின்னர் உயிரிழந்தார். பஸ்சை அடையாளம் கண்ட போலீசார், ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது மட்டுமின்றி, புனேவில் சிறுவன் கார் ஒட்டி சென்று இருவரை கொன்றது, கடந்த ஞாயிற்றுக்கிழமை, மகாராஷ்டிர சிவசேனாவின் தலைவரான ராஜேஷ் ஷாவின் 24 வயது மகன் மிஹிர் ஷா, மும்பையின் வொர்லியில் BMW காரை ஒட்டி சென்று பெண் ஒருவரை ஏற்றி கொன்றுள்ளார்.