ராம நவமி அன்று, அயோத்தி ராம் லல்லாவின் நெற்றியில் ஒளிர்ந்த சூரிய ஒளி
செய்தி முன்னோட்டம்
இன்று நாடு முழுவதும் ராம நவமியை முன்னிட்டு கோலாகல ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நேரத்தில், ராமரின் பிறந்த இடமான அயோத்தியில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
குறிப்பாக அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சூரியக் கதிர்கள் ராம் லல்லாவின் நெற்றியில் விழும் 'சூரிய திலகம் ' வைபவமும் நடைபெற்றது.
அதன்படி மதியம் 12.01 மணியளவில், சூரியனின் கதிர்கள் ராம் லல்லாவின் நெற்றியில் சுமார் இரண்டு முதல் இரண்டரை நிமிடங்களுக்கு ஒளிர்ந்தது.
இந்த மயக்கும் நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அயோத்தி முழுவதும் கிட்டத்தட்ட 100 இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெரிய LED திரைகளில் இந்த நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது.
இந்த 'சூர்ய திலகம்' கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் அடங்கிய, IIT விஞ்ஞானிகள் உருவாக்கிய இயந்திரத்தால் சாத்தியமானது.
embed
ராம் லல்லாவின் நெற்றியில் ஒளிர்ந்த சூரிய ஒளி
The concept of #SuryaTilak is awesome Thanks to our scientists who make this possible Jai Siya Ram 🚩🙏pic.twitter.com/Yv9FnDpMQT— Bong Political Guru ☀️ (@bong_politics) April 17, 2024