ராம நவமி அன்று, ராமர் கோவிலில் விஞ்ஞான உதவியுடன் நடக்கவிருக்கும் ஆச்சரிய நிகழ்வு
அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம் லல்லாவின் முதல் ராம நவமி இதுவாகும். இந்த நாளைக் குறிக்கும் வகையில், ஏப்ரல் 17ம் தேதி சூரிய திலகம்/ சூரிய அபிஷேகம் நிகழ்வு நடக்கிறது. இதற்காக தனிப்பயணக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் கொண்ட கருவியை ஐஐடி பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர். சூரிய அபிஷேகம் அல்லது சூரிய திலகம் எனப்படும் நிகழ்வில், சூரியனின் கதிர்கள், பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வத்தின் மீது படும். அந்த வகையில், இன்று ஏப்ரல் 17ஆம் தேதி ராம நவமி அன்று, சூரியனின் கதிர்கள் ராம் லல்லாவின் நெற்றியில் சூரிய திலகமாக ஒளிவீசும். ராமர், சூரியனின் வழித்தோன்றல்கள் அல்லது ரகு வம்சம் என்று நம்பப்படும் இஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இது குறிப்பிடத்தக்கது.
ராம திலக நிகழ்வின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு பின்னால் செயல்படும் ஐஐடி தொழில்நுட்பம்
இந்த சூரிய திலக நிகழ்வை வடிவமைக்க IIT-R விஞ்ஞானிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். IIT குழு உயர்தர கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் கொண்ட ஒரு கருவியைப் பயன்படுத்தி ராம் லல்லாவின் நெற்றியில் சூரியக்கதிர்களை துல்லியமாக செலுத்தவுள்ளது. அறிக்கைகளின்படி, அந்த எந்திரத்தில், பிரதிபலிப்பு கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் கொண்ட ஒரு கியர்பாக்ஸ் இருக்கும். கர்பகிரஹத்திற்கு அருகில் உள்ள மூன்றாவது மாடியில் பொருத்தப்பட்டுள்ளது. இது, சூரியக் கதிர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கர்ப்பகிரகத்தில் பிரதிபலிக்க உதவும். இந்த எந்திரம், பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ராம நவமி நாளில், சூரிய ஒளியினை துல்லியமாக நிலைநிறுத்தும் வகையில் இந்த கியர்பாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரு பாரம்பரிய இந்திய கலவையான பஞ்ச தத்தும், இந்த கருவியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கியர் பாக்சில் ஈடுபடுத்தப்பட தொல்லியல் வானியல் அறிவியல்
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மணீஷ் புரோஹித், இந்த கியர் பாக்ஸ் பின்னணியில் உள்ள வழிமுறையை விளக்கினார். சூரியனின் கதிர்கள் ராம் லல்லாவின் நெற்றியில் ஒளிர்வதை உறுதி செய்ய மூன்று விஷயங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன என்றார். இந்த மூன்று விஷயங்கள்--ஆர்க்கியோவானியல், மெட்டானிக் சுழற்சி மற்றும் அனலெமா. ஆர்க்கியோவானியல்/தொல்லியல் வானியல் என்பது வான நிலைகளைப் பயன்படுத்தி நினைவுச்சின்னங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறை. மற்றொரு நிகழ்வு அனலெம்மா ஆகும். இது பூமியின் சாய்வு மற்றும் சுற்றுப்பாதையின் காரணமாக ஆண்டுதோறும் சூரியனின் மாறும் நிலையைக் கண்காணிக்கும் எண்-எட்டு வளைவு ஆகும். கடைசியாக, மெட்டானிக் சுழற்சி என்பது சுமார் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வின் போது சந்திரனின் கட்டங்கள் ஆண்டின் அதே நாட்களுடன் மறுசீரமைக்கப்படுகின்றன.