Page Loader
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்?

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்?

எழுதியவர் Sindhuja SM
Jun 10, 2024
05:42 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள ரக்ஷா நிகில் காட்சே(37) என்பவர் தான் தற்போதைய அமைச்சரவையின் இளைய அமைச்சர் ஆவார். 79 வயதான ஜிதன் ராம் மஞ்சி என்பவர் தான் தற்போதைய பாஜக அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ஆவார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.பி.யான ரக்ஷா நிகில் காட்சே, பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இணை அமைச்சராக(MoS) நேற்று பதவியேற்றார். இவர் மகாராஷ்டிராவின் ராவர் மக்களவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார். அதே போல், மோடி 3.0 அரசில் மத்திய கேபினட் அமைச்சராக ஜிதன் ராம் மஞ்சி(79) பதவியேற்றுள்ளார்.

இந்தியா 

முன்னாள் பீகார் முதலமைச்சரான ஜிதன் ராம் மஞ்சி

பீகாரின் 23வது முதலமைச்சராக பணியாற்றியவர் ஜிதன் ராம் மஞ்சி ஆவார். மேலும், இவர் பாஜகவின் கூட்டணி கட்சியான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் (HAM) நிறுவன தலைவர் ஆவார். இதற்கு முன்னதாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகப் இவர் பணியாற்றி இருக்கிறார். 2024 பொதுத் தேர்தலில் கயா தொகுதியில் இவர் வெற்றி பெற்றிருக்கிறார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருக்கும் இளம் அமைச்சர்களில் சிராக் பாஸ்வான் மற்றும் ஜெயந்த் சவுத்ரி ஆகியோரும் அடங்குவர். இரண்டு முழு பதவிக் காலங்களை முடித்து கொண்ட பிரதமர் மோடி, கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஜூன் 9ஆம் தேதியன்று தனது 71 அமைச்சர்களுடன் பதவியேற்று கொண்டார்.