Page Loader
ஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

ஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம்

எழுதியவர் Sindhuja SM
Dec 27, 2023
01:55 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி-பூஞ்ச் ​​செக்டார் பகுதிக்கு சென்றுள்ளார். கடந்த வியாழக்கிழமை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இரண்டு ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.

ட்ஜ்வ்ன் 

ஜம்முவில் தரையிறங்கினார் ராஜ்நாத் சிங் 

இந்த வார தொடக்கத்தில், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பூஞ்ச் ​​சென்று பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். இன்று காலை 11 மணிக்குப் பிறகு ஜம்முவில் தரையிறங்கிய ராஜ்நாத் சிங்கை, லெப்டினன்ட் கவர்னர்(எல்ஜி) மனோஜ் சின்ஹா ​​மற்றும் மூத்த ராணுவம் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். தரையிறங்கியவுடன், அவர் ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக ரஜோரி-பூஞ்ச் ​​பகுதிக்கு சென்றார் . உள்ளூர் இராணுவத் தளபதிகள் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை பாதுகாப்பு அமைச்சருக்கு விளக்குவார்கள். மேலும், காவல் துறை சித்திரவதை காரணமாக இறந்த மூன்று பேரின் குடும்பங்களை பாதுகாப்பு அமைச்சர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.